Ads (728x90)

மனித வாழ்க்கையில் பாலுறவு அல்லது தாம்பத்திய உறவு என்பது அவசியமானது. அது ஒரு கலை இதை கலைநயத்துடன் அணுக வேண்டும். எனவே தான் திரு வள்ளுவர் ‘மலரினும் மெல்லி யது காமம்’ என்று கூறியுள்ளார். வரட்டுத் தனமாகவோ, கடமைக் காக அல்லது பாலுணர்வை வெறித் தனத்தோடு தணித்து கொள்வதற்காக ஈடுபடும் போது தான் அங்கே சிக்கல்கள் தொட ங்குகின்றன.
இன்று பெரும்பாலான முறையான திருமண உறவுகள் முதல் காதல் திருமணங்கள் வரை மண முறிவுகளை நோக்கி செல்லுகிறது இவ ற்றிற்கு அடிப்படை காரணம் தாம்பத்ய உறவில் உண்டாகும் பிழைகளும் குற்றங்களும் தா ன். இன்றைக்கு பாலுணர்வு தவ றாக புரிந்து கொள்ளப்படுவதா லேயே பல்வேறு குழப்பங்களும் சண்டைகளும் ஏற்பட காரண மாகிறது என்கிறது ஒரு புள்ளி விபரம்.
பதற்றம் வேண்டாம்

தாம்பத்ய உறவை பொறுத்தவரை நம்முன்னோர்கள் தெளிவான வழி காட்டலை கூறியுள்ளனர். மலரைப்போல மென்மையாக காம த்தைக் கையாளவேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த உளவிய ல் காரணங்களை நாம் முறையாக கடைபிடிக்கா மையால் பெரிதும் பாலுறவில் சிக்கல் தோன்றுகி றது. கணவனும் மனைவியும் உளப்பூர்வமான ஒத் துழைப்போடு ஈடுபடும்போது எங்கும் சிக்கல் தோன்றுவதில்லை. ஆனால் எங்கோ பிழை நேரும் போது உறவில் சிக்கல் தோன்றுகிற து .மேலும் மேலும் தாம்பத்ய உறவை சிக்கலாக்காமல் இருவரும் முழுமையாக ஈடுபட முதலி ல் எல்லாவற்றையும் பேசித் தீர்க்க வேண்டும் என்கின்ற னர் நிபுணர்கள். தேவையில் லாத பதற்றமும் அச்சமும் தாம்பத்ய உறவில் சிக்கலை உண்டாக்கலாம் என்றும் அவ ர்கள் கூறுகின்றனர்.

தாழ்வு மனப்பான்மை
திருமணமான நாளில் முதன் முதலாக தாம்பத்ய உறவு கொள்ளும் போது உணர்வு கொந்தளிப்பினால் அவர்களினால் முழுமையாக ஈடுபடாமல்போக வாய்ப்பு உண்டா கிறது. இதனால் முழுமையான இன்பத்தை பெறமுடியாமல் தம் பதிகளிடையே ஒருவித புரிந்து கொள்ளாமை உண்டாகிறது . திரு மணத்திற்கு முன்பு நண்பர்களின் தவறான அறிவுரை, சுய இன்ப பழக்கத்தினால் சக்தி முழுமையும் இழந்து விட்டதாக உளவியல் ரீதி யில் எண்ணுகிறார்கள். இதனால் பின்னாளில் பாலுறவில் சிக்கல் உண்டாகிறது. அதேபோல் தவறான பெண்களிடம் பாலுறவு கொள் ளும்போது அவர்களின் தவறான வார் த்தை நடவடிக்கை களினால் பதற்றம் அடைவதனால் அங்கும் தாழ்வு மனப்பான்மை உண்டாகி இது வே பின்னாளில் பாலுறவில் சிக்கலை உண்டாக்குகிறது .

திருமணத்திற்குமுன் பெண்கள் கொ ண்ட உறவு திருமணமான பின் கணவ னுக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சத் திலும் தாம்பத்ய உறவில் சிக்கலை உண்டாக்கு கிறது . வாழ்வில் யாருமே முதலிரவில் முழுமையான இன்பத் தை பெறவில்லை என்கிறது ஒரு புள் ளி விவரம். முதல்நாளில் அச்சமும், தயக்கமும், நடுக்கமும் இயல்பானதே இதை எதிர்கொண்டு இனி மையான வாழ்கையை துவக்குவதே சிறந்த வாழ்க்கை என்று அவர் கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Post a Comment