உயிரினங்கள் அனைத்துக்கும் இனப்பெருக்க காலம் என்று ஆண்டுக்கு சில மாதங்கள் மட்டுமே செக்ஸ் உறவுக்கு ஏற்ற காலமாக இருக்கும், அந்நேரத்தில் மட்டுமே அந்த உயிரினங்கள் உடலுறவு கொள்ளும் ஆனால் மனிதர்கள் மட்டும் ஆண்டின் எல்லா காலங்களிலும் நேரங்களிலும் உடலுறவு கொள்ள ஏற்றதாக உள்ளது. ஆண்-பெண் இருவரது உடலும் எந்த நேரமும் எல்லா காலமும் உறவுக்கு ஏற்றதாக இருக்கும் என்றாலும் பல்வேறு புறச்சுசூழல் மற்றும் உடல், மனக் குறைபாடு காரணமாக இன்பம் அனுபவிப்பதில் சில தடைகள் இருக்கவே செய்யும். அவற்றை தம்பதியர் இருவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். உறவுக்குத் தயார் இல்லாத நிலையில் வற்புறுத்துதல் மிகப்பெரிய மனக்கசப்பை உருவாக்குவதுடன் செக்ஸ் உறவு அனுபவத்தையும் வெறுக்கச் செய்துவிடும். ஆசை இருப்பது ஒரு நிலை என்றால் அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை ஆசை ஏற்படாத நிலையில் உடலுறவுக்கு அழைக்கவோ அனுபவிக்கவோ கூடாது. கீழ்கண்ட பல்வேறு காரணங்களால் செக்ஸ் அனுபவிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். 1. உடல் அசதி 2. மன அழுத்தம் 3. மாதவிலக்கு 4. உடல் நலமின்மை 5. தம்பதிகளுக்குள் சண்டை 6. அதிக போதை 7. கடந்தமுறை செக்ஸில் நடந்த மோசமான நிகழ்வு 8. தொடர்நது ஒரே நிலையில் உறவுகொள்வதில் ஆர்வம் இன்மை மேற்கண்ட காரணங்களால் செக்ஸை தவிர்க்க நினைக்கும் போது விலகிநிற்பதே நல்லது. ஆனால் மனம், உடல் நலத்தைச் சீரமைக்க உடலுறவால் முடியும் என்பதால் மேற்கண்டவற்றை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன்னுடைய இணையைச் சந்தோஷம் அடைய வைத்து இந்த சிக்கலில் இருந்து செக்ஸ் மூலம் விடுதலை வாங்கித் தரவும் முடியும். ஆனால் செக்ஸ் ஆசையைத் தூண்டிவிடுதல் முக்கிய கட்டமாக இருக்க வேண்டும். இதற்கு ஆண் அல்லது பெண் மிகவும் பொறுமையாக உழைக்க வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு தொட்டாலே உணர்ச்சி தூண்டப்பட்டுவிடும். இன்னும் சிலருக்கு நீண்ட காலம் பிடிக்கலாம். தன்னுடைய இணை எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து அதன்படி அணுகி இன்பத்துக்கு அழைப்பதுதான் சரியான வழியாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment